சுடச்சுட

  

  வலங்கைமான் வழிப்பறிச் சம்பவம்:மேலும் ஒருவர் கைது

  By நீடாமங்கலம்  |   Published on : 23rd September 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியில் வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஒருவரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

  வலங்கைமான் பகுதியில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தர ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஜீவானந்தம்.

  இவர் கடந்த மார்ச் 2-ம் தேதி இரவு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்துவிட்டு, பின்னர் மீதமிருந்த ரூ. 3.28 லட்சத்துடன் ஒரத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

  அப்போது, நார்த்தாங்குடி பகுதியில் மர்ம நபர்கள் ஜீவானந்தத்தை வழிமறித்து, அவரைத் தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர்.

  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வலங்கைமான் போலீஸார், தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

  விசாரணையில், உத்திரங்குடி வினோத், திருவோணமங்கலம் ராஜேஷ், குடந்தை பைரவர் தோப்பு நெல்சன், கதிரவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

  இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சீர்காழி புதுத்துறை தென்பாதி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (எ) பார்த்திபனை (29) போலீஸார் தேடி வந்தனர்.

  ஆனால், அவர் மற்றுமொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தனிப்படை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் சேலம் மத்திய சிறைக்குச் சென்ற தனிப்படை போலீஸார், பார்த்திபனை காவலில் எடுத்து விசாரித்தனர்.

  அப்போது, ஜீவானந்தத்திடம் வழிப்பறி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை மீண்டும் சனிக்கிழமை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai