சுடச்சுட

  

  நாகை மக்கள் குறைதீர் கூட்டம்: 31 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

  By நாகப்பட்டினம்,  |   Published on : 24th September 2013 02:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், 31 பேருக்கு ரூ. 11 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.

  நாகை, அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கிப் பயின்று, நிகழாண்டில் உயர்கல்வி வாய்ப்புப் பெற்ற மாணவிகள் 6 பேருக்கு கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 30 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

  சுனாமியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு சுனாமி நிவாரண முதிர்வுத் தொகையாக 2 பேருக்கு ரூ. 7.33 லட்சத்துக்கான காசோலையும், மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்று கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து இறந்த பழையாறைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு விசைப் படகை காப்பீடு செய்திருந்த காப்பீட்டு நிறுவனம் சார்பில் தலா ரூ. 50 ஆயிரம் காப்பீட்டுத் தொகைக்கான உத்தரவும் வழங்கப்பட்டது.

  மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு மடக்குக் குச்சி, கருப்புக் கண்ணாடி, பேசும் கை கடிகாரம் ஆகியன வழங்கப்பட்டது.

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீர்வுக் கோரியும் பொதுமக்களிடமிருந்து 293 மனுக்கள் பெறப்பட்டு, தொடர்புடையத் துறைகளின் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

  மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சமூகப் பாதுகாப்பு நலம்) பொன்னையா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, மீன்வளத் துறை உதவி இயக்குநர் நம்பிராஜ், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உதவி அலுவலர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai