சுடச்சுட

  

  புதைந்திருந்த சாமி சிலைகள் உள்ளிட்ட உலோகப் பொருள்கள் கண்டெடுப்பு

  By பொறையாறு  |   Published on : 24th September 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்கடையூர் அருகே வாய்க்கால் கரையோரத்தில் புதைந்திருந்த சாமி சிலைகள் உள்ளிட்ட 39 உலோகப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

  திருக்கடையூர் அருகேயுள்ள கிள்ளியூர் ஊராட்சிக்குள்பட்ட மஞ்சளாறு கிளை வாய்க்கால் அருகே ஞாயிற்றுக்கிழமை வயலில் நடவும் செய்யும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். அப்போது, வாய்க்கால் கரை ஓரத்தில் குச்சி போன்ற பொருள் ஒன்று நிலப்பரப்பின் மேலே நீட்டிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.

  நிலத்தை தோண்டியபோது, அங்கு சாமி சிலைகள் உள்ளிட்ட உலோகத்தாலான பொருள்கள் புதைந்திருப்பது தெரிய வந்தது.

  அப்போது, அங்கு வந்த திருக்கடையூரில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்க்கும் செல்லதுரை என்பவரிடம் அந்த சிலைகளை பெண்கள் காட்டினராம். செய்வினை செய்து சிலைகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறிய அவர், அந்த சிலைகளை தனது வீட்டுக்கு எடுத்து சென்றுவிட்டாராம்.

  இதுகுறித்து கிள்ளியூர் விஏஓ அளித்த தகவலின் பேரில், தரங்கம்பாடி வட்டாட்சியர் அழகர்சாமி, சிலைகள் கிடைத்த இடத்தை திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த சிலைகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

  ஆஞ்சநேயர், விநாயகர், நாகர், அம்பாள், காளியம்மன், 2 நடராஜர் சிலைகள், 2 தாம்பாளங்கள், திருவாட்சி உள்ளிட்ட 22 உலோகப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

  திங்கள்கிழமை மேலும் சில பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. 2 நந்திகள், திருவாட்சி, நின்ற நிலையில் அம்மன் சிலைகள் 3, அமர்ந்த நிலையில் அம்மன் சிலை 1, ஐயனார் 2, விநாயகர், பால விநாயகர், அடி பீடங்கள் 2, பைரவர், காளி, உடைந்த நிலையில் தட்டுகள் 2 என 17 பொருள்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

   சிலைகளை வீட்டில் கொண்டு வைத்திருந்த செல்லதுரையிடம் செம்பனார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai