வேதாரண்யத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
By வேதாரண்யம், | Published on : 24th September 2013 02:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேதாரண்யத்தில் முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் பி.வி. தேவர் நினைவு அறக்கட்டளை சார்பில், திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. பி.வி. ராசேந்திரனின் 58-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜி. சங்கரவடிவேல் தலைவர் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் என். மாரியப்பன், வட்டாரத் தலைவர் கு.ப. இளம்பாரதி, சமூக ஆர்வலர் நாணா. எஸ். தமிழழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 850 பேருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது.