24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
By நாகப்பட்டினம் | Published on : 24th September 2013 02:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதலுக்காக செப். 23-ம் தேதி புதிதாக 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2013-14 பருவத்திற்கான நெல் கொள்முதலுக்காக நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
நாகை வட்டத்தில் 2, கீழ்வேளூர் மற்றும் திருக்குவளை வட்டத்தில் தலா- 1, மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் தலா 3, சீர்காழி வட்டத்தில் 6 என்ற எண்ணிக்கையில் 19 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
செப். 23-ம் தேதி முதல் கூடுதலாக 24 புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை வட்டத்தில் 3, குத்தாலம் வட்டத்தில் 8, தரங்கம்பாடி வட்டத்தில் 10, சீர்காழி வட்டத்தில் 3 என்ற எண்ணிக்கையில் புதிதாக 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தங்களது நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்றுப் பயனடையுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.