சுடச்சுட

  

  : மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளைச் சேர்ந்த 2436 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

  மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதற்கான விழாவுக்கு ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர் ஜெயபால் பேசியது:

  கல்விக்கான அனைத்துத் திட்டங்களும் முதல்வரின் உத்தரவின்பேரில், விலையில்லாமல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மடிக்கணினி, மிதிவண்டிகள், கட்டணமில்லா கல்வி ஆகியவை முத்தாய்ப்பானவை. அரசின் திட்டங்களை பயன்படுத்தி மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார்.

  தொடர்ந்து, மயிலாடுதுறை டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செயிண்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி, நீடூர் அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு  மேல்நிலைப் பள்ளி, மணல்மேடு அரசு மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 10 பள்ளிகளைச் சேர்ந்த 2436 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 79.40 லட்சம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் வழங்கினார்.

  விழாவில் ஆட்சியர் து. முனுசாமி பேசியது: 2013-14-ம் கல்வியாண்டில் பயிலும் 16876 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்க தமிழக அரசு ரூ. 5.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.

  எம்எல்ஏக்கள் எம். சக்தி (சீர்காழி), என்.வி. காமராஜ் (வேதாரண்யம்), மயிலாடுதுறை உதவி ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஏ.கே. சந்திரசேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் வரவேற்றார். நிறைவில் மயிலாடுதுறை கல்வி மாவட்ட அலுவலர் கு. சீனிவாசன் நன்றி கூறினார்.

  வேதாரண்யத்தில்....இதேபோல், வேதாரண்யத்தில் 3 பள்ளிகளைச் சேர்ந்த 613 மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

  வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் ஏ. ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். விழாவில், வேதாரண்யம் எம்எல்ஏ என்.வி. காமராஜ் பங்கேற்று, மாணவர்களுக்கு சைக்கிள்கள் அளிப்பதை தொடங்கி வைத்தார். 

  வேதாரண்யம் சுப்பையா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு 208, குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு-198, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு-207 என மொத்தம் 613 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் அளிக்கப்பட்டன.

  விழாவுக்கு வட்டாட்சியர் சி. ராம்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகர்மன்றத் தலைவர் மலர்கொடி நமசிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai