Enable Javscript for better performance
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 25th September 2013 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பு ஊசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை (செப். 24) முதல் தொடங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

     நாகை மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

    மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது பசு மற்றும் எருமைகள் மற்றும் 4 மாதத்துக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கோமாரி  நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். 21 நாள்களுக்கு இந்தப் பணி நடைபெறும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai