சுடச்சுட

    

    : வேலை உறுதி திட்டத்தில் குறைவான கூலி வழங்கப்படுவதை கண்டித்து, சங்கரன்பந்தலில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    பொறையாறு அருகேயுள்ள இலுப்பூர் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலி வழங்கப்படாமல், வேறுபட்ட நிலையில் ஊதியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளிலும் இந்த நிலையே காணப்படுகிறது. இவற்றை களைந்து, அரசு நிர்ணயித்த ரூ. 148-ஐ முழுமையாக வழங்க வேண்டும். வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

    செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) எஸ். லதா, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அளிக்கப்பட்ட உறுதியின்பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி வட்டச் செயலர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. சீனிவாசன், விவசாய சங்க வட்ட செயலர் தி. ராசைய்யன் உள்ளிட்ட பலர் மறியலில் கலந்து கொண்டனர்.

    மறியலால் இந்தப் பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai