சுடச்சுட

    

    நாகை ஆட்சியரக வளாகத்தில்தீக்குளிக்க முயன்றவர் கைது

    By நாகப்பட்டினம்,  |   Published on : 25th September 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலீஸாரின் கெடுபிடி நடவடிக்கைகளிலிருந்து காப்பாற்றக் கோரி, நாகை ஆட்சியரக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    நாகை கோட்டைவாசல்படி, செக்கடித் தெருவைச் சேர்ந்தவர் கோ. சேகர் (42). ஒரு கொலை வழக்கு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன.  கடந்த மார்ச் மாதம் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்ட இவர்,  அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார்.

    போலீஸார் அடிக்கடி தன்னை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்வதாகவும், தன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் முயற்சிப்பதாகவும் புகார் தெரிவித்து, கோ. சேகர் கடந்த 16-ம் தேதி ஆட்சியரிடம் மனு அளித்தார்.

    இந்நிலையில், சேகர் மற்றும் அவரது மனைவிகள் லதா, வள்ளி மற்றும் குழந்தைகள், தாய், மைத்துனிகள் உள்பட 8 பேர் ஒரு மண்ணெண்ணெய் கேனுடன் செவ்வாய்க்கிழமை காலை ஆட்சியரக வளாகத்துக்குள் நுழைந்தனர்.

    பின்னர், தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்ட சேகர், போலீஸாரின் கெடுபிடிகளிலிருந்து தன்னை காப்பாற்றக் கோரி முழக்கம் எழுப்பியவாறு, ஆட்சியரகத்துக்குள் நுழைய முயன்றார். அவரது குடும்பத்தினரும் அவருடன் ஆட்சியரகத்துக்குள் நுழைய முன்றனர்.

    ஆட்சியரக பிரதான வாயிலில் சேகர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீஸார் மறித்தனர். இதைத் தொடர்ந்து, அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    தகவலறிந்த ஆட்சியர் து. முனுசாமி, ஆட்சியரக வாயிலுக்கு வந்து, சேகரிடம் விவரங்களைக் கேட்டறிந்து, அவர் அளித்த மனுவைப் பெற்றுக் கொண்டார்.

    பின்னர், அங்கிருந்து வெளியேற முயன்ற சேகரை நாகூர் போலீஸார் மறித்து கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டுச் சென்றனர்.

    நாகூர் காவல் நிலையத்தில் சேகர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai