சுடச்சுட

  

  நாகை மாவட்டத்துக்கு1.25 டன் நெல் கொள்முதல் இலக்கு

  By நாகப்பட்டினம்,  |   Published on : 25th September 2013 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் 22,259 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது; இதையொட்டி, மாவட்டத்துக்கு 1.25 டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் து. முனுசாமி.

  ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :

  நாகை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  நாகை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 43 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்முதல் நிலையங்களில் சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ. 1,180 என்ற விலையிலும், பொது ரகம் ரூ. 1,130 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. நிகழாண்டில், நாகை மாவட்டத்தில் 22,259 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, நாகை மாவட்டத்துக்கு 1.25 டன் நெல் கொள்முதல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில்  1.46 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் ஆட்சியர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில் உடனிருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai