சுடச்சுட

  

  பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் கூட்டுறவு பால் சங்க அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ஐந்து ரூபாயும், எருமைப் பாலுக்கு 7 ரூபாயும் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். மற்ற மாநிலங்கள் வழங்குவதுபோல், ஊக்கத் தொகையாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வழங்க வேண்டும். தீவன விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கறவை மாடுகள் வாங்க வட்டியில்லாமல் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி. ரத்தினம் தலைமை வகித்தார். வி. சிங்காரவேலு, ஆர்.ஜே.நடராஜன், பி.சி. ஜான், எஸ்.கே.சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தம்புசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.எஸ். கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai