Enable Javscript for better performance
பெரம்பூர் அருகேசாலை விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், பெரம்பூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமார்(31). இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் நோக்கிச் சென்றுள்ளார். பெரம்பூர் காவல் சரகம், அகரகீரங்குடி அருகே சென்றபோது, அங்கு பழுது காரணமாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியின் மீது முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்தக் காயமடைந்த முத்துக்குமார், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தார்.  இது குறித்து பெரம்பூர் காவல் ஆய்வாளர் சாமிநாதன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai