Enable Javscript for better performance
ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 25th September 2013 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் (மிலிட்டரி) கல்லூரியில் சேர்ந்து பயில விரும்பும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

    டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில் 2014-ம் ஆண்டுக்கான 8-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 2001-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்குள்ளான காலத்தில் பிறந்தவர்கள், 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது 7-ம் வகுப்பை நிறைவு செய்த சிறார்கள் இந்தச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை- 3 என்ற முகவரிக்கு அக். 10-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வுகள் வரும் டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் நடைபெறும்.

    இதுகுறித்த மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ர்ழ்ஞ் என்ற இணையதளத்தில் அறியலாம் அல்லது நாகை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விவரங்களைப் பெறலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai