சுடச்சுட

    

    கற்களால் நிரம்பியுள்ள பாசன வாய்க்காலை தூர்வார கோரிக்கை

    By dn  |   Published on : 26th September 2013 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே பாதை பணியின் போது பாறை, கற்களால் மூடப்பட்டுள்ள பெரிய ஏரி, வேம்பன்குளம் ஏரி பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என ஏரிகள் பாசன சங்கத் தலைவர் வேத. குஞ்சருளன் தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:  

    பேராவூரணி அக்னியாறு கோட்டத்தில் ஆதனூர் பெரிய ஏரி, வேம்பன்குளம் ஏரி ஆகிய இரு பாசன ஏரிகள் உள்ளன. இந்த இரு ஏரிகள் மூலம் சுமார் 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இரு ஏரிகளும் அம்புலியாற்றின் தண்ணீரால் நிரம்பி பாசன வாய்க்கால் மூலமாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  நிகழாண்டில் காரைக்குடி - திருத்துரைப்பூண்டி அகல ரயில் பாதைப் பணிக்காக ரயில்வே துறையால் இப்பகுதியில் பழைய பாலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பழைய பாலங்களை அப்புறப்படுத்தியதில் இரு ஏரிகளுக்கும் வரும் பாசன வாய்க்கால்கள் பாறைகள் மற்றும் கற்களால் மூடப்பட்டுள்ளது.

    தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அம்புலியாற்றில் தண்ணீர் வந்தால் இந்த இரு ஏரிகளுக்கும் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் பாசன வாய்க்கால்கள் மூடப்பட்டு இருக்கிறது. எனவே கற்களால் மூடிக்கிடக்கும் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai