சுடச்சுட

  

  நாகை மாவட்ட திமுக இளைஞரணி கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  நாகை மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட திமுக செயலர் ஏ.கே.எஸ். விஜயன் எம்.பி தலைமை வகித்துப் பேசினார்.

  திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் உதயகுமார், சிவதாஸ், விஜயேந்திரன், மலர்வண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திமுக மாவட்டத் துணைச் செயலர் இளஞ்செழியன், ஒன்றியச் செயலர்கள் மு. ஞானவேலன், எஸ்.பி.டி. சார்லஸ், நாகை நகரச் செயலர் அ. பன்னீர் மற்றும் திமுக இளைஞரணி மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு, மின்வெட்டு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவற்றைறை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் தயாரித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விநியோகிப்பது. மேலும், சைக்கிள் பிரசாரம், தெருமுனை பிரசாரம் போன்ற இயக்கங்களை மேற்கொள்வது.

  வேளாண் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலக்கச் செய்வதைக் கண்டிப்பதுடன்,  கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் மற்றும் குளங்களை தூர்வாரி சீரமைக்க வலியுறுத்துவது.  தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை கண்டிப்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸாண்டர் வரவேற்றார். துணை அமைப்பாளர் பாரி பாலன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai