Enable Javscript for better performance
நகை பாலிஷ் செய்வதாக மோசடி: பிகார் இளைஞர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நகை பாலிஷ் செய்வதாக மோசடி: பிகார் இளைஞர்கள் இருவர் கைது

    By dn  |   Published on : 26th September 2013 12:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே நகை பாலிஷ் செய்து தருவதாகக் கூறி பெண்ணிடம் மோசடி செய்த பிகாரை சேர்ந்த 2 இளைஞர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் சின்னதேவன்காடு பகுதிக்கு புதன்கிழமை சென்ற 2 இளைஞர்கள் நகைகளுக்கு பாலிஷ் செய்து தருவதாகக் கூறினராம்.

     இதையடுத்து சண்முகம் மகள் சரண்யா (22) தனது 2 பவுன் தங்க செயினைக் கொடுத்தாராம். அதை வாங்கிய இளைஞர்கள் பாலிஷ் செய்வதைபோல பணியில் ஈடுபட்டார்களாம்.

    அப்போது வீடு திரும்பிய சரண்யாவின் தாய் செல்வி (45) தகவலறிந்து மகளைத் திட்டியதோடு,இளைஞர்களிடம் இருந்த நகையை கேட்டுள்ளார்.

    அதற்குள் அந்த செயினை இளைஞர்கள் வைத்திருந்த ஒருவகையான அமிலத்தில் மூழ்கி எடுத்துக் கொடுத்தனராம்.

    அதை வாங்கி பார்த்தபோது கரைந்த நிலையில் சுமார் அரை பவுன் அளவுக்கு இருந்ததோடு,செயின் 3 துண்டுகளாக உடைந்ததாம்.

    இதையடுத்து தப்பியோட முயன்ற அவர்களை கிராமத்தினர் விரட்டிப் பிடித்து போலீஸôரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் பிகாரைச் சேர்ந்த மணிசர்மா மகன் சசிசர்மா(24),ராம்குபோதேவ் மகன் சந்தர்குமார் (20) எனத் தெரியவந்தது.

    இதுகுறித்து செல்வி அளித்த புகாரின் பேரில் வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்த போலீஸôர் இருவரையும் கைது செய்து வேதாரண்யம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai