சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும் என்ற அரசாணை எண். 92-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

  பல்கலைக்கழகங்களில் உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணங்களைத் திரும்பப் பெற வேண்டும். பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும். 

  அனைத்துக் கல்லூரிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசுக் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர் மற்றும் முதல்வர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

  அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலர் அன்புராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் ரஞ்சித், மாவட்டக் குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

  பொறையாரில்...  இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொறையாறு டிபிஎம்எல் கல்லூரியில் மாணவர்கள் புதன்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பின்னர் இந்திய மாணவர் சங்க தரங்கம்பாடி வட்டச் செயலர் ஐயப்பன்,வட்டத் தலைவர் செல்வக்குமார்,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலர் சரவணன்,மாவட்டப் பொருளாளர் மார்க்ஸ் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai