சுடச்சுட

    

    நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்னா

    By நாகப்பட்டினம்,  |   Published on : 27th September 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகையில் தர்னா போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்பை உருவாக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற்று, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். 15-வது இந்திய தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டு முடிவுப்படி ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

    அகவிலைப்படியின் 50 சதத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம், நாகை அரசு ஊழியர் சங்க அலுவலகம் முன் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயலர் ஏ.டி. அன்பழகன் விளக்கவுரையாற்றினார்.

    மாநில துணைத் தலைவர் சு. சிவகுமார், ஓய்வுபெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் ந. காவியன், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் சொ. கிருஷ்ணமூர்த்தி, தொலைத்தொடர்பு ஊழியர் சங்க செயலர் வி. ஜோசப், போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர் சீனி. மணி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் எம். காந்தி ஆகியோர் பேசினர்.

    கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகை மாலி  நிறைவுரையாற்றினார். 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai