சுடச்சுட

  

  நாகை மாவட்டம்,தலைஞாயிறு அருகே கருகும் நெல் பயிர்களைக் காப்பாற்ற பாசன ஆறுகளில் தண்ணீர் அளிக்க வலியுறுத்தி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  காவிரி படுகை வெண்ணாறு கோட்டத்திலிருந்து பல்லவராயன் ஆறு,அய்யூரான் வாய்க்கால்,பெட்டையாறு போன்ற ஆறுகள் மூலம் பாசனம் பெறும் உத்திரங்குடி உள்ளிட்ட 35 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிகழ்பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  வறண்ட வானிலை நீடித்துவரும் நிலையில், ஆற்றில் போதியளவு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இந்நிலையில்,ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி இந்த மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த பொதுப்பணித் துறை வெண்ணாறு கோட்ட உதவிச் செயற்பொறியாளர் சிதம்பரநாதன்,உதவிப் பொறியாளர் பார்த்தசாரதி,திருக்குவளை துணை வட்டாட்சியர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தையில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

  இதில் திமுக விவசாயத் தொழிலாளர் அணி நாகை மாவட்ட துணைத் தலைவர்  சுபாஷ்சந்திரபோஸ்,சிபிஎம் திருவாரூர் மாவட்ட செயலர் நாகராசன்,பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்பு நிர்வாகிகள் இடும்பையன்,நாகேந்திரன்,

  பிரகாஷ்,கோவிந்தராஜ்,சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மறியலால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai