சுடச்சுட

  

  நாகை மாவட்டம், பாலையூர் அருகே 40 வயதுள்ள அடையாளம் தெரியாத பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

  பாலையூர் காவல் சரகம், எழுமகளூர் கிராமத்தில் தனியார் வயலில் காயத்துடன் கிடந்த சடலம் குறித்து விஏஓ ஜெயப்பிரகாஷ் அளித்தத் தகவலின் பேரில், பாலையூர் காவல் ஆய்வாளர் சொக்கநாதன் மற்றும் போலீஸார் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.   சடலத்துக்கு அருகே   சுத்தியல், உளி ஆகியன கிடந்தன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி, உதவி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களைப் பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai