சுடச்சுட

    

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இன்வெர்ட்டர் மற்றும் யுபிஎஸ் தயாரிப்பு பயிற்சி அக். 4-ம் தேதி தொடங்கப்படுகிறது.

    இதுகுறித்து மயிலாடுதுறை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் வ.சி. பரமசிவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    மயிலாடுதுறை ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் இன்வெர்ட்டர் தயாரித்தல் மற்றும் யுபிஎஸ் தயாரித்தல் மற்றும் பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி வகுப்பு மயிலாடுதுறையில் அக். 4-ம் தேதி தொடங்கி அக். 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    தனியார் தொழில் பயிற்சி நிறுவன பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

    பயிற்சியில் பங்கேற்போருக்கு மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 40 வயதுக்குள்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    பயிற்சியில் பங்கேற்போரை தெரிவு செய்வதற்கான நேர்காணல் அக். 4-ம் தேதி வரை மயிலாடுதுறை ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.

    குடும்ப அட்டை, ஜாதிச் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்- 3, ஆகியவற்றுடன் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டவுடன் அசல் சான்றுகள் திருப்பித் தரப்படும்.

    இந்தப் பயிற்சிக்கு 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04364- 224319 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai