Enable Javscript for better performance
கொலை வழக்கில் இளைஞருக்குஆயுள் சிறை தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    கொலை வழக்கில் இளைஞருக்குஆயுள் சிறை தண்டனை

    By நாகப்பட்டினம்  |   Published on : 28th September 2013 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்விரோதம் காரணமாக ஒருவரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.

    நாகையை அடுத்த நாகூர் எம்.ஜி.ஆர் நகரைச்  சேர்ந்தவர் க. ராஜேஷ்குமார் (27). இவரும், நாகூர்  பீரோடும் தெருவைச் சேர்ந்த த. தர்மன் (27),  தும்பைப் பூ மடத்தெருவைச் சேர்ந்த ச. வினோத் (28) ஆகியோரும் நண்பர்கள்.

    வினோத்துக்கும், நாகூரைச் சேர்ந்த சக்தி செல்வம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக, ராஜேஷ்குமார் மற்றும் தர்மன், வினோத் ஆகிய 3 பேரும் சேர்ந்து, 2007-ம் ஆண்டு நவ. 19-ம் தேதி இரவு சக்தி செல்வத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். நாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜேஷ்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, நாகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனிடையே, தர்மன் மற்றும் வினோத் ஆகியோர் வெவ்வேறு சம்பவங்களில் கொலை செய்யப்பட்டனர். பின்னர், ராஜேஷ்குமார் மீதான வழக்கு தனியே விசாரிக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த பின்னர், க. ராஜேஷ்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 500 அபாரதமும் விதித்து நாகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். சோலைமலை வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai