சுடச்சுட

  

  குத்தாலம் வட்டம், பாலையூர், மேக்கிரிமங்கலம் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 28) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில்  நடைபெறும் பராமரிப்பு பணிகளால் பாலையூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாலையூர்,  தேரழந்தூர், கோமல், மருத்தூர், மாந்தை, வடமட்டம், கோணேரிராஜபுரம், கோடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும்,

  மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பழையக்கூடலூர், கொக்கூர், பேராவூர், கருப்பூர், திருவாலங்காடு, திருவாவடுதுறை, கரைகண்டம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai