சுடச்சுட

    

    நாகையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி தொடக்கம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 28th September 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மாநில சதுரங்க விளையாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட சதுரங்க விளையாட்டுக் கழகம் சார்பில் 2013-ம் ஆண்டு தகுதிச் சுற்றுக்கான மாவட்ட செஸ் போட்டி நாகையில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

    நாகையில் உள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்தப் போட்டியை, நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தொடக்கிவைத்தார்.

    மாவட்ட சதுரங்க விளையாட்டுக் கழகத் தலைவர் கோவிந்தராஜூலு, துணைத் தலைவர் கோவிந்தராஜ், செயலர் பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில், வட்டாட்சியர் பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    256 பேர் பங்கேற்பு

    9 சுற்றுகளாக நடைபெறும் இந்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இந்தப் போட்டியில் முதல் 25 இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. முதல் 10 இடங்களைப் பெறுவோர் மாநிலப் போட்டிக்கு அனுப்பப்படுவர். இந்தப் போட்டியில் 256 பேர் பங்கேற்றுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai