சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் தகட்டூர் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் தூய்மை பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் முகாமிட்டுள்ள தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் ஒருவாரகால சேவை பணி அண்மையில் தொடங்கியது.

    வியாழக்கிழமை ஊராட்சி மன்ற வளாகம், பிரதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பாலித்தீன் பொருள்களின் தீமைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    பிரசார நிகழ்ச்சிக்கு நக்கீரனார் பள்ளித் தாளாளர் ஆ. வீராசாமி தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர்  பி.வ. தக்கணாமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதேபோல, அங்குள்ள கோயில்கள், பள்ளி வளாகங்களில் தூய்மை பணியில் ஈடுபடுவதோடு, நாள்தோறும் மாலை  நேரத்தில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள்,விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    முகாம் தொடக்க நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர்கள் சிவகுரு. பாண்டியன் (பஞ்சநதிக்குளம்), எம்.எஸ். அமிர்தகடேசுவரன் (தகட்டூர்), ஒன்றியக்குழு உறுப்பினர்  என். சந்திரசேகரன், தலைமை ஆசிரியர் வை. சாரதி உள்ளிட்டோர் பங்கேற்று, மாணவர்களின் சேவையை பாராட்டினர்.

     மாணவர்களுக்கு, திட்ட அலுவலர்கள் சி. திராவிடமணி, வீ. தமிழரசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் உதவி வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai