சுடச்சுட

  

  மயிலாடுதுறையில் கோயிலுக்குச்  சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினி மூங்கில்தோட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

  மயிலாடுதுறை நகராட்சிக்குள்பட்ட மூங்கில்தோட்டம் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மன்னார்சாமி கோயில்,  கிராமக் கோயிலான காத்தாயி அம்மன் கோயில்களுக்குச் சொந்தமான இடங்கள், குளம் ஆகியவற்றை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு  செய்து வைத்திருப்பதாகவும், அதனை வீட்டு மனைகளாக்க முயற்சி மேற்கொண்டு வருவாதாகவும், அந்த இடங்களை பொது மக்களின் பயன்பாட்டுக்கு மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூங்கில்தோட்டம் பகுதி மக்கள், கடந்த 25-ம் தேதி மயிலாடுதுறை சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

  அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினி, தனி வட்டாட்சியர்  பொன். பாலசுப்பிரமணின் மற்றும் வருவாய் துறை

  அதிகாரிகள் காத்தாயி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

  ஆய்வுக்குப் பின்னர், சார் ஆட்சியர்  பொதுமக்களிடம் தெரிவித்தது:

  கத்தாயி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான  26,598 சதுர அடி நிலமும், 70816 சதுர அடி குளம் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்.

  அதேபோல், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்க்கப்பட்டுள்ள கேணி மற்றும் மீன் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் குளம் ஆகியவற்றை மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு  கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai