சுடச்சுட

    

    கீழையூரில் அண்ணனைஅடித்துக் கொன்ற தம்பி கைது

    By நாகப்பட்டினம்,  |   Published on : 29th September 2013 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், கீழையூரில் செலவுக்குப் பணம் கேட்டுத் தகராறு செய்த அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை  போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கீழையூரை அடுத்த விழுந்தமாவடி, மணல்மேடு வடக்குப் பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன்கள் குழந்தைவேலு (35), கணேசன் (23).

    குழந்தைவேலு அண்மைக்காலமாக எந்த வேலைக்கும் செல்லாமல், அடிக்கடி செலவுக்குப் பணம் கேட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு குழந்தைவேலு, தனது தம்பி கணேசனிடம் செலவுக்குப் பணம் கேட்டுத் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கணேசன், இரும்புக் குழாயால் குழந்தைவேலுவை தாக்கினாராம். இதில் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கணேசனை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai