சுடச்சுட

    

    நாகை, கீழ்வேளூர், கீழையூரில் சாலை மறியல்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 29th September 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நாகை (சிக்கல்), கீழ்வேளூர், கீழையூரில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கடைமடை பகுதிகளின் சம்பா சாகுபடி பணிகளுக்கு முறைவைக்காமல் ஆறுகளில் தண்ணீர் திறக்க வேண்டும். புதிய பயிர்க்  கடன்களை உடனடியாக வழங்க  வேண்டும். வறட்சியைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    சிக்கலில்: நாகையை அடுத்த சிக்கல் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கோ. முருகையன் தலைமை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை ஒன்றியச் செயலர் எம். சுப்பிரமணியன், விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.என். ஜீவாராமன், கே. மாரிமுத்து, வி. ராதா, கே. வடிவேல், பி. காத்தமுத்து, கே. கணபதி, பி. சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நாகை வட்டாட்சியர் பரிமளம் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, சாகுபடி பணிகளின் தேவைக்கேற்ப தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில், மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    கீழ்வேளூரில்: கீழ்வேளூர் கடைவீதியில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எம்.என். அம்பிகாபதி, விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எம். காத்தமுத்து, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் எம். சாந்தி, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி. ஜெயராமன் ஆகியோர் பேசினர்.

    வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, திங்கள்கிழமை முதல் தேவைக்கேற்ப ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்தப் போராட்டங்களால் நாகை -  திருவாரூர் வழித்தடப் போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது.

    கீழையூரில்: கீழையூர் மேலப்பிடாகை கடைவீதியில் நடைபெற்ற சாலை மறியலுக்கு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் வி.  சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி. முருகையன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார்.

    கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. வைரன், எம். நடராஜன், கீழையூர் ஒன்றியச் செயலர் ஆர். முத்துப்பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம். முருகையன், எம். கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வருவாய்த் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai