சுடச்சுட

    

    "நிகழ் கல்வியாண்டில் 16,876 பேருக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்படும்'

    By நாகப்பட்டினம்  |   Published on : 29th September 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டத்தில் 2013-14 ஆம் கல்வி ஆண்டில் 16,876 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

    நாகை மாவட்டம், திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விலையில்லா சைக்கிள்  வழங்கும் விழாவில் அவர் பேசியது:

    கல்வியில் வளர்ச்சிப் பெற்றால்தான்  அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிப் பெற முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர்,  கல்வித் துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு அளித்துள்ளார்.

    நாகை மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் ரூ. 5.15 கோடி மதிப்பில் 16,867 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது என்றார்.

    இதைத் தொடர்ந்து, திருமருகல், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், அம்பல், முட்டம், நாகூர், நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 2,421 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

    மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.  விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், வருவாய்க் கோட்டாட்சியர் அ. சிவப்பிரியா, மாவட்டக் கல்வி அலுவலர் கு. சீனிவாசன், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் க. பழனிவேல், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி, ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai