சுடச்சுட

  

  அகஸ்தியம்பள்ளியில் நகர்ப்புற சுகாதார நிலையம் திறப்பு

  By வேதாரண்யம்,  |   Published on : 30th September 2013 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், அகஸ்தியம்பள்ளியில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

  விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி தலைமை வகித்தார். தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் என். கலுசிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் பங்கேற்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசியது:

  மக்களின் நலனை கருத்தில் கொண்டு சுகாதார திட்டங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிதியை அளித்து வருகிறது. ஒன்றியங்கள்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்து உரிய மேல் சிகிச்சைக்கு வழிவகுக்கப்படுகிறது என்றார்.

  நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் மலர்கொடி நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன், நகராட்சி ஆணையர் சி. சுந்தரேசன், வட்டார மருத்துவ அலுவலர் க.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai