சுடச்சுட

    

    "கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்

    By 'நாகப்பட்டினம்  |   Published on : 30th September 2013 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் அரசின் நோக்கமறிந்து சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

    நாகை மாவட்டம், செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பயிர்க் கடன் வழங்கும் விழா மற்றும் ரூ. 20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் பணி தொடக்க விழாவில் அவர் பேசியது:

    மக்களின் அடிப்படை தேவைகளை விரைவாக நிறைவேற்ற அரசு உறுதியுடன் உள்ளது. இதனடிப்படையில் தான், வெளிச் சந்தையில் ரூ. 40-க்கு விற்கப்படும் அரிசியை ரூ. 20-க்கு வழங்கப்படுகிறது.

    விவசாயிகளின் நலன் காக்கவும், கூட்டுறவு சங்கங்களை முறைப்படுத்தவும் கூட்டுறவுத் தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் முதல்வரின் நோக்கமறிந்து, சிறப்பான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றார் அமைச்சர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்துப் பேசுகையில், நிகழாண்டில் பயிர்க் கடனுக்கான இலக்கு ரூ. 110 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரை பயிர்க் கடனாக ரூ. 52 கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ. 252 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில், செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் 26 பேருக்கு ரூ. 13 லட்சம் மதிப்பில் பயிர்க் கடன், 2 மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி, 2 குடும்பங்களுக்கு வங்கிக் கடன் உதவியுடன் கறவைப் பசுக்கள் ஆகியன வழங்கப்பட்டன.

    பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ். ஆசைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai