சுடச்சுட

  

  சம்பா சாகுபடி விவசாயிகளுக்குத் தடையின்றி பயிர்க் கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) கோரிக்கை விடுத்துள்ளது.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழையூர் ஒன்றிய மாநாடு, நாகை மாவட்டம், கீழையூர், புதுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி கே. தவமணி தலைமை வகித்தார்.

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் எம். செல்வராசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சங்கக் கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டைத் தொடங்கிவைத்துப் பேசினார்.

  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ். சம்பந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீழையூர் ஒன்றியச் செயலர் டி. செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைச் செயலர் ஏ. நாகராஜன், ஒன்றியத் தலைவர் டி. கண்ணையன், செயலர் வி. சுப்பிரமணியன், இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர் எஸ். ரமேஷ், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  நிர்வாகிகள் தேர்வு: தமிழ்நாடு விவசாயிகள் சங்க கீழையூர் ஒன்றியத் தலைவராக கே. தவமணி, துணைத் தலைவர்களாக எஸ். பெருமாள், டி. பாப்பையன், செயலாளராக கே. சீனிவாசன், துணைச் செயலாளர்களாக டி. துரைசாமி, ஆர். முருகேசன், பொருளாளராக எம்.எச். பஷீர் அகமது ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

  கீழையூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அதிகளவில் மாங்காய் உற்பத்தி செய்யப்படுவதையொட்டி, இப்பகுதியில் மாம்பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலையை அரசு தொடங்க வேண்டும். விதை, உரம் உள்ளிட்டவைகளின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதையொட்டி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் விலை வழங்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் புதிய பயிர்க் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai