சுடச்சுட

    

    தரங்கம்பாடி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி

    By பொறையாறு,  |   Published on : 30th September 2013 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக கடற்கரை  தூய்மைதினத்தையொட்டி, நாகை மாவட்டம், தரங்கம்பாடி  கடற்கரையை தூய்மைப்படுத்தும்  பணியை கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை மேற்கொண்டனர்.

    பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், மெரி டைம் பவுண்டேஷன் ஆகியவற்றின்  சார்பில், பூம்புகாரிலிருந்து  தரங்கம்பாடி வரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் 150 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். கல்லூரி  முதல்வர் ஜோனாஸ் குணசேகரன்  தரங்கம்பாடி கடற்கரையில்  இப்பணியை தொடக்கிவைத்தார். கல்லூரியின் என்.எஸ்.எஸ், என்.சி.சி, ஒய்.ஆர்.சி ஆகியவற்றின்  பொறுப்பாளர்கள் - பேராசிரியர்கள்  பாண்டியன், செல்வராஜ், பிரீட்டா ஜாஸ்மின், ஜோதிபாக்கியம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai