Enable Javscript for better performance
தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சனிக்கிழமை குடிபோதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    கோட்டூரை அடுத்துள்ள திருவண்டுத்துறை புரக்கோட்டகம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சனிக்கிழமை இரவு குடிபோதையில் அம்மாசி மகன் சரபோஜி (27) என்பவரது வீட்டின் முன் நின்று கொண்டு தகாத வார்த்தைகளை பேசி சப்தம் போட்டுக் கொண்டிருந்தாராம்.

    இதை சரபோஜி தட்டிக் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அரிவாளால் சரபோஜியை வெட்டினாராம். அதைத் தடுக்க முயன்ற சரபோஜியின் தாய் பசுபதி (50)க்கும் அரிவாள் வெட்டு விழுந்ததாம்.

    பலத்த காயமடைந்த இருவரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai