சுடச்சுட

  

  நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அக். 2-ல் கிராம சபைக் கூட்டம்

  By நாகப்பட்டினம்,  |   Published on : 30th September 2013 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் அக். 2-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  காந்தி ஜயந்தி நாளான அக். 2-ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ள 434 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. பசுமை வீடுகள் திட்ட சோலார் விளக்குகள் பராமரிப்பு, கிராம ஊராட்சிகளில் நிறுவப்பட்ட சோலார் தெரு விளக்குகள் பயன்பாட்டை உறுதி செய்தல், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம், தன்னிறைவுத் திட்டம், மாநில நிதிக் குழு மானிய நிதி விடுவித்தல், மழைநீர் சேகரிப்பு திட்டம், திடக்கழிவு அகற்றுதல், பிளாஸ்டிக் உபயோகம் தவிர்த்தல், ஊராட்சி பொது செலவினம் ஆகியன குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

  மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான விருது, ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புகளுக்கான விருது, மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர் நலம் ஆகியன குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் பெறப்படவுள்ளது.எனவே, ஊராட்சி பேரிடர் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமசபை உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் நடைபெறும்  கிராமசபைக் கூட்டத்தில் தேசிய ஊரக  வேலைவாய்ப்புத் திட்டம், கிராம முன்னேற்றம், முதல்வரின் சூரிய ஒளி திட்ட பசுமை வீடு உள்ளிட்ட  அரசு நலத் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து  விவாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் கிராமசபைக்  கூட்டங்களில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai