சுடச்சுட

  

  நாகை: வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு

  By நாகப்பட்டினம்,  |   Published on : 30th September 2013 02:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக்.1) வெளியிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மக்களவைத் தேர்தலையொட்டி, நாகை மாவட்டத்தில் அக். 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகம், நாகை வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.அக். 2 -ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், இந்த வாக்காளர் பட்டியல், பெயர் விவரங்கள் படிக்கப்படும். அப்போது பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.  18 வயதுக்கு மேற்பட்ட மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அந்தந்தப் பகுதிகளுக்கான வாக்குச்சாவடி அலுவலர்களிடமிருந்தும், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலிருந்தும் பெற்று விண்ணப்பிக்கலாம்.

  வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக அக். 6, 20, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களைத் தெரிவிக்கலாம்.

   திருத்தம் மேற்கொள்வதற்கான கடைசி தேதி அக். 31. மேலும், அங்கீகரிக்கப்பட்ட இணையதள மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai