Enable Javscript for better performance
மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    By மயிலாடுதுறை  |   Published on : 30th September 2013 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை காந்திஜி சாலையில்  போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள், நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை இரவு அகற்றப்பட்டது.

    காந்திஜி சாலையில் உள்ள வணிகர்கள் சிலர் தங்களது  நிறுவனத்துக்கு முன்னர் படிகள் கட்டுதல், தரைத்தளம்   அமைத்து சாலையை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதனால் குறுகிய சாலையான காந்திஜி சாலையில் வாகனப் போக்குவரத்துக்கும், பாதசாரிகள்  செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மயிலாடுதுறை சார் ஆட்சியர் திவ்யதர்ஷினி, உதவி காவல்  கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹாதிமணி ஆகியோர்  நகராட்சி நிர்வாகத்தினருக்கு விடுத்த கோரிக்கையை  அடுத்து, காந்திஜி சாலையில் வைக்கப்பட்டிருந்த  வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள், சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள்  மற்றும் தரைத் தளங்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai