Enable Javscript for better performance
மாநில செஸ் போட்டிக்கு தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்கும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    உலக கோப்பை செஸ் போட்டி வரும் நவம்பர் மாதம் 6- ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், நார்வே நாட்டின் மாக்னஸ் கார்ல்சன் ஆகியோர் மோதுகின்றனர்.

    இப் போட்டி நடைபெறும் அதே விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் சார்பில் மாநில அளவில் பல்வேறு பிரிவின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கும் செஸ் போட்டிகள் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில் 32 மாவட்டங்களிலிருந்து 320 பேர் பங்கேற்கிறார்கள். பரிசுத் தொகையாக ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இப் போட்டியில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து பத்து வீரர், வீராங்கனைகள் தேர்வுக்கான போட்டி மன்னார்குடி சண்முகா மெட்ரிக்ப் பள்ளியில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.  இறுதி சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பெருகவாழ்ந்தான் எம். பரத் கல்யாண், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம், ஏ. ஹர்சினி, கே. சுரஜ், முத்துப்பேட்டை கே. சிந்து, மன்னார்குடியை சேர்ந்த எஸ். விஜய், எஸ். ஸ்ரீநிதி ஸ்ரீதர், எம்.என். ராம்குமார்,வி.எஸ். அபிராமி, திருவாரூர் எஸ். ஹரிபிரியா ஆகிய சிறப்பிடம் பெற்று மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    பரிசளிப்பு விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் டி. சுதா அன்புச்செல்வம் தலைமை வகித்தார். மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்ற பத்து பேருக்கும் ஊக்கத் தொகை, சான்றிதழ்,கேடயம் ஆகியவற்றை வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai