சுடச்சுட

    

    வேதாரண்யத்தில் ஆடவர் குழுவுக்கு பவர் டிரில்லர் வழங்கல்

    By வேதாரண்யம்  |   Published on : 30th September 2013 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் (2012-13) கீழ் ஆதிதிராவிடர் வகுப்பு ஆடவர் குழுவுக்கு முழு மானியத்தில் பவர் டிரில்லர் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

    வேதாரண்யத்தில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேளாண் அலுவலர் என். சந்திரகாசன் தலைமை வகித்தார்.

    இதில் பங்கேற்ற அந்தத் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் என்.வி. காமராஜ், ரூ. 1.10 லட்சம் மதிப்புள்ள பவர் டிரில்லரை  ஆயக்காரன்புலம்-4 ஆம் சேத்தி ஆதிதிராவிடர் ஆடவர் குழுவுக்கு இலவசமாக வழங்கினார்.

    இதில் வழக்குரைஞர் நமச்சிவாயம், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் வேதரத்தினம், ரவி, எழிலரசி, மாரிமுத்து, தொழில்நுட்ப மேலாளர்  அருள்பிரகாஷ், வல்லுநர்கள் ஆரோக்கியராஜ், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai