திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் பாட்டு பட்டிமன்றம் மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்றது.
நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு கட்சியின் நகரச் செயலர் என். செல்வராஜ் தலைமை வகித்தார். நகரத் தலைவர் பி.எஸ். குமார், துணைச் செயலர் டி. சத்தியேந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் குமார், க. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக நடைபெற்ற பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலையப் பேச்சாளர் வி.பி.ஆர். இளம்பரிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் குத்தாலம் பி. கல்யாணம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் கி. சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், க. அன்பழகன் ஆகியோர் பேசினர்.
இதைத் தொடர்ந்து, அண்ணா சிங்காரவேலு தலைமையில் "கருணாநிதியின் நிலைத்த புகழுக்கு காரணம் இலக்கிய மறுமலர்ச்சியே, சமூக பெரும் புரட்சியே' எனும் தலைப்புகளில் நடைபெற்ற பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் இலக்கிய மறுமலர்ச்சியே எனும் தலைப்பில் முனைவர் கோ. பழனி, அன்னபாரதி, சமூக பெரும் புரட்சியே எனும் தலைப்பில் கவிஞர் ராஜநிதி, பேராசிரியர் வேதநாயகி ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் நாகை மாவட்டச் செயலர் ஏ.கே.எஸ். விஜயன், ஒன்றியச் செயலர் எம். மூர்த்தி (மயிலாடுதுறை), மு. ஞானவேலன் (செம்பனார்கோவில்), மோகன. அன்பழகன் (சீர்காழி), ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் நிவேதா. முருகன், ஆர். மனோகரன், விவசாயப் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ஏ. அலெக்ஸாண்டர், நகர்மன்ற உறுப்பினர் ஆர். அசோக்குமார், நகர மகளிரணி அமைப்பாளர் கே. சந்திரா மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், வார்டு செயலர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, கட்சியின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பவானி சீனிவாசன் வரவேற்றார். நிறைவில் நகர துணைச் செயலர் ஆர். நடராஜன் நன்றி கூறினார்.