சீர்காழி புதிய பேருந்து நிலைய கடை வியாபாரியை மர்ம நபர்கள் தாக்கியதுடன், அவரது கடையையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் குளிர்பானம் மற்றும் பலசரக்கு கடை வைத்திருப்பவர் க. பார்த்திபன் (33).
இவரது கடைக்கு புதன்கிழமை இரவு 11 மணியளவில் வந்த இருவர் பார்த்திபனிடம் தகாத வார்த்தைகளைக் கூறி பொருள் கேட்டனராம்.
இதில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம்.
இதையடுத்து, அந்த மர்ம நபர்கள் இருவரும் பார்த்திபனை தாக்கியதுடன், கடையையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சீர்காழி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.