ஜூன் 28 மின் தடை

நாகை, திருமருகல் மற்றும் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு (ஜூன் 28) சனிக்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

நாகை, திருமருகல் மற்றும் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு (ஜூன் 28) சனிக்கிழமை மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை, திருமருகல் மற்றும் வேட்டைக்காரனிருப்பு துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, மேற்கண்ட 3 துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது என நாகை கோட்ட மின்வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தத்துக்குள்ளாகும் பகுதிகள் நாகை: வேளாங்கண்ணி, நாகை, நாகூர், வெளிப்பாளையம், திட்டச்சேரி, ஓ.என்.ஜி.சி, மஞ்சக்கொல்லை, பரவை, பொய்யூர், சிக்கல், தோணித்துறை.

திருமருகல் : மருங்கூர், திருமருகல், எரவாஞ்சேரி, திருப்புகலூர், சீயாத்தமங்கை, போலகம், திருக்கண்ணபுரம்.

வேட்டைக்காரனிருப்பு : திருப்பூண்டி, புதுப்பள்ளி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com