சீர்காழியில், விழுதுகள் இயக்கத்தின் சார்பில் தமிழக அரசின் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களிடம் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ ம.சக்தி பங்கேற்று, தென்பாதி, வி.என்.எஸ். நகர், திருபுரசுந்தரிநகர், டி.பி. சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இயக்கத் தலைவர் பொறியாளர் சரவணன், அருண்பான்டியன், அதிமுக நகரச் செயலர் பக்கிரிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.