மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் தேர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மயிலாடுதுறை சார் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் நாகை மாவட்ட அலுவலர் ஜி. கணபதி தலைமை வகித்தார்.
மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடுதுறை, மணல்மேடு, மங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 6 ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவிகள் விடுதிகளில் 279 காலியிடங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த விடுதிகளில் தங்கிப் பயில விருப்பம் தெரிவித்து 98 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு விணணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும் விடுதியில் தங்கி பயில தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் சி.ஏ. மாணிக்கவாசன், வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜன், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் என். மனோகரன், பேராசிரியர் மதிவாணன் மற்றும் அரசு அலுவலர்கள், விடுதிக் காப்பாளர்கள் பங்கேற்றனர்.