Enable Javscript for better performance
ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்'

    By மயிலாடுதுறை,  |   Published on : 17th April 2015 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் இரா. செல்வநாயகம்.

    மயிலாடுதுறையைச் சேர்ந்த தேசிய நல்லாசிரியர் ஜி.வி. மனோகரனின் பணி நிறைவு பாராட்டு விழா மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.

    விழாவில் அவர் மேலும் பேசியது:

    மயிலாடுதுறையில் உள்ள 3 நகராட்சிப் பள்ளிகளின் உயர்வுக்காக பாடுபட்டதுடன், மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையான கல்வியை அளித்து தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர் ஜி.வி. மனோகரன். இவர் பணி ஓய்வு பெற்றாலும், கல்விச் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    நல்ல மாணவர் சமூகத்தை ஆசிரியர்களால் மட்டுமே நாட்டுக்கு கொடுக்க முடியும். அதற்கு ஆசிரியர் பணியைத் தேர்வு செய்பவர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

    பணி ஓய்வு பாராட்டு விழாவுக்கு, தொழிலதிபர் ஏ.ஆர். சுவாமிநாதன் தலைமை வகித்தார். ஏ. தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    மூத்த குடிமக்கள் அவைத் தலைவர் டி.எஸ். தியாகராஜன், இயற்கை வேளாண் ஆர்வலர் எம்.ஆர். சம்பந்தம், தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஐரின் ஜெயராணி, பொன். பூங்குழலி,

    பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். பாலாஜிபாபு, மயிலாடுதுறை வணிகர் சங்கத் தலைவர் ஆர். அசோக், செயலர் சி. செந்தில்வேல், நல்லாசிரியர்கள் தாயுமானவன், கோ. முருகையன், த. பாலசுப்பிரமணியன், திருநாவுக்கரசு, சேந்தங்குடி குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி முகவர் மு. ஞானவேலன் உள்ளிட்டோர் விழாவில் பாராட்டுரை வழங்கினர். தமிழாசிரியர் இரா. செல்வக்குமார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். வி. குணசேகரன் வரவேற்றார். டாக்டர் எஸ். ராஜேஸ்கண்ணா நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai