Enable Javscript for better performance
இன்று ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி- Dinamani

சுடச்சுட

    

    இன்று ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

    By நாகப்பட்டினம்,  |   Published on : 17th April 2015 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் விடுப்பட்ட நபர்களுக்கு புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப். 17) முதல் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம் வட்டம், சேஷமூலை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப். 17-லும், தென்பிடாகை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.18-லும், பண்டாரவாடை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப். 19, 20-லும் நடைபெறுகிறது.

    கீழ்வேளூர் வட்டம் மணலூர், கிள்ளுக்குடி பகுதிகளுக்கு கிள்ளுக்குடி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் ஏப். 17-லும், வண்டலூர், மோகனூர் பகுதிகளுக்கு மோகனூர் ஊ.ஒ. நடுநிலைப் பள்ளியில் ஏப்.18, 19-லும், வெண்மணி ஊ.ஒ.தொ. பள்ளியில் ஏப்.20, 22, 23 ஆகிய 3 நாள்களும் நடைபெறுகிறது.

    வேதாரண்யம் வட்டம் மூலக்கரை பகுதிக்கு தலைஞாயிறு-4 பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.17-லும், கத்தரிப்புலம் பகுதிக்கு பழங்கள்ளிமேடு ஊ.ஒ.தொ.பள்ளியில் ஏப்.18-லும், வண்டுவாஞ்சேரி பகுதிக்கு பிராந்தியக்கரை பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.19-லும், குரவப்புலம் பகுதிக்கு உம்பளச்சேரி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.20-லும் நடைபெறுகிறது.

    மயிலாடுதுறை வட்டம் மறையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.17-லும், கோவங்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.18-லும், சித்தர்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.19-லும், கோடங்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.20-லும் நடைபெறுகிறது.

    சீர்காழி வட்டம் காத்திருப்பு, பாகசாலை, செம்பதனிருப்பு, 67. கொண்டாத்தூர் பகுதிகளுக்கு பாகசாலை தொ.வே.கூ. வங்கியில் ஏப்.17, 18-லும், நத்தம், ஆலவேலி, சேமங்கலம் பகுதிகளுக்கு நத்தம் ஊ.ஒ.தொ.பள்ளியில் ஏப்.19-லும், ராதாநல்லூர், நாங்கூர், கீழசட்டநாதபுரம் பகுதிகளுக்கு ராதாநல்லூர் ஊ.ஒ.தொ. பள்ளியில் ஏப்.20-லும் நடைபெறுகிறது.

    தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.17-லும், அரசூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.18,19-லும், சேத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஏப்.20,22-லும் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai