Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் மனிதச் சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் மயிலாடுதுறையில் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கிளை தலைவர் ஆர். கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் எஸ். சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதை கைவிட வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஓய்வு பெற்ற மின் ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai