Enable Javscript for better performance
நாகையில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகையில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி ஆய்வு

    By நாகப்பட்டினம்  |   Published on : 17th April 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை நாகப்பட்டினம் மாவட்டத்துக்கான சிறப்பு மேற்பார்வையாளர் அனில்மேஷ்ராம், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து சிறப்பு மேற்பார்வையாளர் கூறியது: இந்த திட்டம் தொடர்பான முதல் சிறப்பு முகாம் ஏப். 12-ல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற்றது. மற்ற சிறப்பு முகாம்கள் ஏப். 26, மே 10, மே 24 ஆகிய தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன. சிறப்பு முகாம்களில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்ததில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்கள், செல்லிடப்பேசி, மின்னஞ்சல் போன்ற முகவரி போன்ற விவரங்களை வாக்குச்சாவடி அலுவலரிடம் அளித்திட வசதி செய்யப்பட்டுள்ளது.வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை எண்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ய்ஸ்ள்ல்.ண்ய் -லும் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். மேலும், 1950 என்ற எண்ணுக்கு போன் செய்தும், 51969 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் தாங்களே பதிவு செய்யும் வசதியும் தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai