Enable Javscript for better performance
மன்னார்குடியில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம்

    By மன்னார்குடி,  |   Published on : 17th April 2015 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின்(ஜேக்டோ) ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மன்னார்குடியில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் எஸ். துரைராஜ், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்டச் செயலர் பெ.ரா. ரவி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கப் பொறுப்பாளர் ஆர். கோபிநாத், தமிழாசிரியர் கழக மாவட்டச் செயலர் கா. உதயகுமார், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் நா. மதிவாணன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் அ. முரளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் கோ. வீரமணி, ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வீ. ராஜசேகரன், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்க மாவட்டத் தலைவர் பா. பஞ்சாபகேசன் ஆகியோர் தீர்மானங்களை விளக்கிப் பேசினர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைக்கல்வி வரை தாய்மொழியாகிய தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை நீக்கிவிட்டு பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும். தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண். 266 ஐ திருத்தம் செய்து தமிழ்ப்பாடத்தை முதல் பாடமாக வைக்க வேண்டும் என்பன உள்பட 15 அம்சக் கோரிக்கை தீர்மானங்களை வலியுறுத்தி, ஏப். 19-ம் தேதி திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai