Enable Javscript for better performance
1067 பேருக்கு விலையில்லா பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    சீர்காழி ஒன்றியம், காரைமேடு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகள் 1067 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்பட்டன.

    விழாவுக்கு வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சித் தலைவர் எஸ். சந்திரசேகரன், ஒன்றியக்குழுத் தலைவர் வே. பாரதி, ஒன்றியச் செயலர் ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் ம. சக்தி பங்கேற்று, 1067 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை வழங்கிப் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் ராமகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலர் போகர். ரவி, பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அஞ்சம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai